இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை நேற்று (09) பதிவாகியது.

அந்த நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 1,44,029 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகினர்.

இதன்படி இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 இலட்சத்தை கடந்துள்ளது.

அத்துடன் 773 பேர் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 168,467 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் சர்வதேச ரீதியில் நேற்றைய தினமும் பிரேசில் நாட்டிலேயே அதிகளவான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்த நாட்டில் நேற்றைய தினம் 3,647 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர்.

இதற்கமைய பிரேசிலில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 348,934 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நேற்றைய தினம் அதிக கொவிட்-19 நோயாளர்களும் பிரேசில் நாட்டிலேயே பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் மாத்திரம் பிரேசிலில் 89,090 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியானதுடன், தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 37 இலட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.