ஒரே நேரத்தில் இரண்டு முறை கர்ப்பம் தரித்த பெண்.. பிறந்த குழந்தைகளுக்கு உடலில் ஏற்பட்ட மாற்றம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்
இங்கிலாந்தின் பாத் நகரை சேர்ந்தவர் ரெபேக்கா ராபர்ட்ஸ். இந்த பெண் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து, கர்ப்பமான நிலையில் ரெபேக்கா மீண்டும் தனது கணவருடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதன்பின்னர், சில மாதங்கள் கழித்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ரெபேக்காவுக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
அப்போது, ரெபேக்கா மீண்டும் ஒருமுறை கர்ப்பம் தரித்திருப்பதாகவும், தற்போது அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் வளர்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரெபேக்காவுக்கு சமீபத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த இரட்டை குழந்தைகள் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படும் இந்த கருத்தரித்தலுக்கு சூப்பர்ஃபெட்டேஷன் என மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் பெற்றோர் வைத்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளும் நலமாக இருந்தாலும், ஆண் குழந்தையை விட பெண் குழந்தை உருவத்தில் சிறியதாகவும் பலவீனமாகவும் பிறந்து உள்ளது.
இதற்குக் காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
தற்போது இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் கவனித்துவருகின்றனர்.