இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்!

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்!

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்! | Tearful Story Myanmar Refugees In Sri Lanka

அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து, கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்! | Tearful Story Myanmar Refugees In Sri Lankaஇந்நிலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா இந்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார்.

இவர்களை பிற்பகல் 3 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார்.

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்! | Tearful Story Myanmar Refugees In Sri Lanka

மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அத்துடன் இவர்களை தங்கவைப்பதற்காக நாமகள் வித்தியாலயமும் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) இவர்களுக்கான மதிய உணவை AHRC தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது.

அதேவேளை மியான்மார் அகதிகள் படகு நேற்றையதினம் முல்லைத்தீவு ப்கடலில் கரையொதுங்கைய நிலையில், அவர்கள் தற்போது திருகோண்மலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்ட மியான்மார் மக்களின் சோகக்கதை கண்ணீரை வரவழைந்துள்ளது.