பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

பசிபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு (Pacific island nation of Vanuatu) அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனுவாட்டு கடற்கரைக்கு சற்று தொலைவில் இன்று (17.12.2024) செவ்வாய்க்கிழமை ஏற்பட்டதாக ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. 

பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை | Tsunami Warning Issued After Strong Earthquakes

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் சுமார் 330,000 மக்கள் வசிக்கும் 80 தீவுகளைக் கொண்ட வனுவாட்டு தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.