இலங்கையில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து ; மூவர் பலி ...27 பேர் படுகாயம்!

   ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், மூவர் உயிரிழந்ததுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கண்டி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அட்டனிலிருந்து பயணித்த குறித்த பஸ் அட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுதுள்ளது.

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து ; மூவர் பலி ...27 பேர் படுகாயம்! | Fatal Accident In Hatton Today 3Killed 27 Injured

பஸ்ஸின் சாரதி , நடத்துனர் உட்பட பயணிகள் பலர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளர். 

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து ; மூவர் பலி ...27 பேர் படுகாயம்! | Fatal Accident In Hatton Today 3Killed 27 Injured

மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.