விமானநிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இரு பெண்கள்!

விமானநிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இரு பெண்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 76 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராமை மற்றும் எத்கந்துர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 40 வயதுடைய பெண்கள் ஆவார்.

விமானநிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இரு பெண்கள்! | Two Women Shocked Airport Officials

பெண்கள் இருவரும் அபுதாபியிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 51,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 255 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.