பங்களாதேஷில் 7 நாட்களுக்கு முடக்கல் நிலை அமுல்

பங்களாதேஷில் 7 நாட்களுக்கு முடக்கல் நிலை அமுல்

பங்களாதேஷில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 7 நாட்களுக்கு முடக்கல் நிலையை அமுல்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அங்கு நேற்றைய தினம் 6, 830 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து அங்கு தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,24,594 ஆக அதிகரித்துள்ளது.

பங்களதேஸில் நாளொன்றில் அதிக நோயாளர்கள் நேற்று பதிவாகியிருந்தனர்.

அத்துடன் நேற்று 50 பேர் மரணித்தமையடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை 9,155 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 7 நாட்களுக்கு முடக்கல் நிலையை அமுல்படுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த நாட்டு சாலை போக்குவரத்து அமைச்சர் ஒபைதுல் குவாடர் இன்று ஊடகங்களுக்கு இதனை அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவசர தேவைகளுக்கு மக்கள் வெளியில் செல்ல முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிற்சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் ஊழியர் பிரிவுகளாக அழைக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார வழிமுறைகள் உரியவகையில் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.