வவுனியாவில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த பெண்! வெளியான அதிர்ச்சி காரணம்

வவுனியாவில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த பெண்! வெளியான அதிர்ச்சி காரணம்

வவுனியாவில் உள்ள உலுக்குளம் - பாவற்குளம் பகுதியில் பெண்ணொருவர் முதலை கடித்துப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் (21-12-2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த பெண்! வெளியான அதிர்ச்சி காரணம் | Woman Die After Being Bitten Crocodile In Vavuniya

குறித்த சம்பவத்தில் 67 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.