கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு!

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு!

மொரட்டுவை, இந்திபெத்த பகுதியில் மனைவியை கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு! | Moratuwa Husband Suicide After Assaulting Wife

குறித்த நபர் நேற்றையதினம் (22-12-2024) மதியம் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கணவனின் தாக்குதலில் காயமடைந்த பெண், பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கு முன்னர் அவர், அயல் வீட்டில் இருந்த நபரொருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்... மனைவியை தாக்கிய கணவன் எடுத்த விபரீத முடிவு! | Moratuwa Husband Suicide After Assaulting Wifeதாக்குதலில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, சிறிது காலமாக நிலவி வந்த தகராறே இந்த தாக்குதலுக்கு காரணமென பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.