இலங்கையின் தென்கிழக்கு வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடலில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணிக்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால் குறித்த கடல் பகுதிகளும் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும்.
இந்த கடற்பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், இலங்கையின் தென்கிழக்கே உள்ள ஆழ்கடல் பகுதிகள் சில வேளைகளில் 65 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவ சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோட்டுகொள்ளப்பட்டுள்ளது.