நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள்: ஏப்ரல் 1- 1957

நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள்: ஏப்ரல் 1- 1957

இந்தியாவில் முதலன் முறையாக 1957-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. 1873 - அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோஷேயில் மூழ்கியதில் 547 கொல்லப்பட்டனர். 1924 - அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை

இந்தியாவில் முதலன் முறையாக 1957-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி நயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. 1873 - அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோஷேயில் மூழ்கியதில் 547 கொல்லப்பட்டனர். 1924 - அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார். 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. 1937 - ஏமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. 1939 - எசுபானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜப்பானின் ஒக்கிநாவா தீவுகளில் இறங்கினர்.

 


1946 - அலூஷன் தீவுகளில் நிகழ்ந்த 7.8 அளவு நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் கொல்லப்பட்டனர். 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது. 1948 - பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது. 1949 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன. 1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது. 1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், வோஸ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1979 - ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது. 1981 - சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1997 - ஹேல்- பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது. 2001 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் சுலோபதான் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தார். 2001 - நெதர்லாந்து ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது. 2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. 2006 - ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.