இரண்டு விமானங்கள் மோதியதில் 583 பேர் பலியான நாள்: மார்ச் 27- 1977

கனாறித் தீவுகளில் இரண்டு விமானங்கள் 1977-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி நேருக்குநேர் மோதிக்கொண்டது.

கனாறித் தீவுகளில் இரண்டு விமானங்கள் 1977-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் 583 பயணிகள் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 

* 1890 - கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். * 1918 - மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன. * 1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் அச்சு அணிஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது. * 1958 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத் பிரதமர் ஆனார். * 1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.

 

* 1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார். * 1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது. * 1970 - கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.

 

 

* 1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர். * 1980 - நார்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர். * 1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார். * 1994 - அலபாமாவில் சூறாவளி தாக்கியதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.