தமிழகத்தில் ஒரு இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரு இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளது.

நேற்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4,270 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும் 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது.