முதலையிடம் சிக்கி காணாமல் போன காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு (காணொளி)
மாத்தறையில் நில்வலா கங்கையில் முதலை காவிச்சென்ற நிலையில் காணமல் போயிருந்த காவல் துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நில்வலா கங்கையில் விழுந்த காவல்துறை அதிகாரி ஒருவரை முதலையொன்று காவிச்சென்ற சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியது.
இவ்வாறு காவல்துறை அதிகாரி நாதுகல பகுதியில் வைத்தே இவ்வாறு முதலையிடம் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காவல்துறை அதிகாரியின் கையடக்க தொலைபேசி கங்கையில் விழுந்ததை தொடர்ந்து அதை அவர் எடுப்பதற்காக முயற்சித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் திடீரென தவறி கங்கைக்குள் விழுந்த காவற்துறை அதிகாரியை முதலையொன்று இழுத்துச் சென்றதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த அதிகாரியின் சடலத்தை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.