முப்படையினரை களமிறக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

முப்படையினரை களமிறக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

  பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரை களமிறக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முப்படையினரை அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

முப்படையினரை களமிறக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் | Special Gazette To Deploy Armed Forces Srilanka

அதன்படி பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த விசேட ஆணை பிறப்பிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.