வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை : தேடி அலையும் உறவினர்கள்.

வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை : தேடி அலையும் உறவினர்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம்(வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேரந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை(28.02.2026) குறித்த பெண் பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் பழுகாமத்திலிருக்கின்ற வங்கி ஒன்றுக்கும் சென்றுவிட்டு அன்றையதினம் முற்பல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீடு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அன்றையதினம் 11 மணிவரைக்கும் அப்பெண்ணின் பைபேசி தொடர்பிலிருந்துள்ளது. 11 மணிக்குப் பின்னர் அவரது தொலைபேசி இயங்கவில்லை, எனவும்,குறித்த பெண் இதுவரையில் அவரது வீடு வந்து சேரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை : தேடி அலையும் உறவினர்கள். | Woman Who Went To Hospital Never Returned Homeஇச்சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது மகளுக்கு என்ன நடந்தது எவ்வாறு காணாமல் போனார் என்பது தமக்குத் தெரியாதுள்ளது. எனவே மகளைக் கண்டு பிடித்துத் தருமாறு காணாமல் போயுள்ள பெண்ணின்தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அம்மாவிற்கு என்ன நடந்தது என நாம் தவித்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அம்மாவை நாம் தேடி அலைந்து திரிகின்றோம், அம்மாவைக் கண்டு பிடித்து தாருங்கள் என அப்பெண்ணின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பப் பெண் வீடு திரும்பவில்லை : தேடி அலையும் உறவினர்கள். | Woman Who Went To Hospital Never Returned Homeஅப்பெண் காணாமல் போனபோது சாம்பல் நிற சேலைஅணிந்திருந்துள்ளார். அப்பெண்ணைக் கண்டால் 075 694 0655, 077 384 8385, 074 157 7381 ஆகிய கைபேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.