
புளத்சிங்களவில் வீட்டின் முன் கொலை செய்யப்பட்ட நபர்
புளத்சிங்கள பிரதேசத்தில் நபரொருவர் தனது வீட்டுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்களினால் குறித்த நபர் நேற்று (07) தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புளத்சிங்கள காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
புளத்சிங்கள - கோவின்ன பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது வேறொரு பிரதேசத்திற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணை புத்தல காவல்துறையினரால் மேற்கொண்டு வருகின்றனர்