சோமாலியாவின் தலைநகரில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடம்

சோமாலியாவின் தலைநகரில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடம்

சோமாலிய தலைநகர் மொகடிஷூவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்தனர்.

விருந்தகம் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பின்போது, குறைந்தது 20 பேர் இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், 30 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

தாக்குதலை அடுத்து துப்பாக்கிப் பிரயோகமும் இடம்பெற்றதாக பிரதேச உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தம்மாலேயே மேற்கொள்ளப்பட்டதாக அல்-ஷபாப் என்ற ஆயுதகுழு இன்று உரிமை கோரியுள்ளது.