
தனியார் துறையிடம் இருந்து 128 மெகாவோல்ட் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்
தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக தனியார் துறையிடம் இருந்து 128 மெகாவோல்ட் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக மின்சாரத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன எமது செய்தி பிரிவிற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அனுமதியை பெறுவதற்காக குறித்த கோரிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் வறட்சி காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைவடைந்து வரும் நிலையில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்காவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய மின்கட்டமைப்பில் 350 மெகா வோல்ட் மின்சாரத்தை இணைப்பதற்கான நாட்டின் முதலாவது இயற்கை திரவ எரி வாயு நிலையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் கெரவலபிட்டியில் ஆரம்பிக்கப்படவுள்ளது