கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக 84,075 உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 3155 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினம் 417 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,437 ஆக உயர்டைந்தது