
குழந்தை பராமரிப்பு நிலையத்தில் நடந்த கொடுமை! நீதிமன்றம் கொடுத்த கடுமையான தீர்ப்பு
னியார் குழந்தை பராமறிப்பு நிலையம் ஒன்றில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 41 வயது நபருக்கு 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து NCPA இன் சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணையை ஆரம்பித்து புறக்கோட்டையில் வசிக்கும் குறித்த நபரை கைது செய்திருந்தனர்.
இதையடுத்து சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் சந்தேகநபரை குற்றவாளி எனக் கருதி அவருக்கு 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.
தண்டனைக்கு மேலதிகமாக, சந்தேகநபருக்கு ரூ 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக 250,000 ரூபாய் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்கத் தவறினால், அவரது சிறைத் தண்டனை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.