
பரீட்சை நிலையங்களுக்கு அருகில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்போரை கைது செய்ய நடவடிக்கை
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இடம்பெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகிக்கப்பவர்களை கைது செய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக பரீட்சை மண்டபங்களை அண்மித்த பகுதிகளில் மேலதிக வகுப்புக்களின் அறிவித்தல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்