துப்பாக்கிகளை கைவசம் வைத்திருந்த இருவர் கைது

துப்பாக்கிகளை கைவசம் வைத்திருந்த இருவர் கைது

துப்பாக்கிகளை கைவசம் வைத்திருந்தமை தொடர்பில் இரண்டு பேர் அங்குலானை மற்றும் உடுதும்பரை ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள் 20 மற்றும் 32 ஆகிய வயதுகளை கொண்டவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் விமான படையில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது