கொவிட் நோயாளி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

கொவிட் நோயாளி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொவிட் நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த கொரோனா குறித்த நோயாளி இன்று அதிகாலை – காலி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை தேடி தற்போது எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

குறித்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் இருதய நோய் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர் நடத்தப்பட்டதில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து அவர் முதலாம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றார்.