தென்மராட்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

தென்மராட்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன் பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் இருந்து வன் பொருட்களுடன் யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின் போது, தென்பகுதியில் இருந்து வன் பொருட்களுடன் வந்த கனரக வாகனம் தலைகீழாக கவிழ்ந்து, பாரிய விபத்து இடம்பெற்றிருந்த போதும் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.