அரசாங்கத்தை நம்பாது அடம்பிடிக்கும் யாழ்ப்பாணத்தார்
வளைகுடா போர் பதற்றத்தால் அரசாங்கம் எரிபொருள் தட்டுபாடு ஏற்படாது என உறுதி மொழி வழங்கியபோதும், யாழில் எரிபொருள் வரிசை முடிந்தபாடில்லை .
இந்நிலையில் யாழில், பதுக்கல் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய், அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் வாகன சாரதியை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.