
சட்டவிரோத வாகன ஓட்டப் போட்டி; 15 பேர் கைது - 9 வாகனங்கள் பறிமுதல்
பணத்தை பந்தயமாக வைத்து உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி போட்டிகளை ஏற்பாடு செய்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பியகம - சியம்பலாபே பிரதேசத்தில் இவர்கள் இப்போட்டியை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இணையத்தளத்தினுாடாக தொடர்புகொண்டு இதனை ஏற்பாடு செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்த 06 உந்துருளிகள் மற்றும் 03 முச்சக்கர வண்டிகளை பியகம காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்