பரிதவித்து நின்ற நாய்க்கு மீன் செய்த உதவி…தீயாய் பரவும் காட்சி

பரிதவித்து நின்ற நாய்க்கு மீன் செய்த உதவி…தீயாய் பரவும் காட்சி

தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்கு குளத்திலுள்ள மீன்கள் உதவி சம்பவம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய், திடீரென பந்தை அருகிலுள்ள குளத்தில் தள்ளியது. இதனை அடுத்து குறித்த நாய் குளத்திற்கு அருகில் சென்று பந்தை எடுக்க முற்பட்ட நிலையில், குளத்திலுள்ள மீன்கள் பந்தை கரைக்குத் தள்ளின.

எனவே கரைக்கு வந்த பந்தை நாய் இலகுவாக எடுத்துச் சென்று மீண்டும் விளையாடியது. இந்த சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வைரலாகப் பரவி வருகிறது.