நாட்டில் மீண்டும் கனமழை ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

அதன்படி வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
கண்டி மாவட்டம்: உடுதும்பர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர.
கேகாலை மாவட்டம்: கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, அரநாயக்க.
மாத்தளை மாவட்டம்: லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, இறத்தோட்டை.
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி.
மேலும், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு
பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல, காலி மாவட்டம்: நியகம, கண்டி மாவட்டம்: மெததும்பர, பாததும்பர, மொனராகலை மாவட்டம்: படல்கும்புர. நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன, வலப்பனை, நோவூட், அம்பகமுவ. இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவான, அயகம பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்: பதுளை மாவட்டம்: மீகஹகிவுல, கந்தகெட்டிய, ஹப்புத்தளை, பசறை, பண்டாரவளை.
அம்பாந்தோட்டை மாவட்டம்: வலஸ்முல்ல. கண்டி மாவட்டம்: உடபலாத, உடுநுவர, பாததும்பர, பஸ்பாகே கோரளை.
கேகாலை மாவட்டம்: தெரணியகல, புலத்கொஹுபிட்டிய.
குருநாகல் மாவட்டம்: மல்லவப்பிட்டிய, ரிதிகம
மொனராகலை மாவட்டம்: வெல்லவாய.
நுவரெலியா மாவட்டம்: மத்துரட்ட, மேற்கு கொத்மலை, கிழக்கு கொத்மலை, ஹங்குரன்கெத்த.
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, நிவித்திகல, எஹெலியகொட, கொலொன்ன.