
காத்தான்குடி குளத்தில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு..!
காத்தான்குடி - மஞ்சந்தொடுவாய் குளத்தில் குளிக்க சென்று காணாமல் போன இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் நேற்று ஏரியில் மீன்பிடிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் மஞ்சந்தொடுவாயில் வசிக்கும் 22 வயதுடையவர் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.