இலங்கை கிரிக்கட் வீரர்களின் வேதனத்தில் நாற்பது சதவீதத்தினை குறைப்பது தொடர்பில் கிரிக்கட் நிறுவனம் அவதானம்
ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரிக்கட் வீரர்களின் வேதனத்தில் 40 சதவீத்தினை குறைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர்களின் போது வீரர்கள் சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தாமை காரணமாக வேதனத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.