தடுப்பூசியால் நடுத்தர வயதினரிடையே ஏற்படும் எதிர் விளைவுகள்

தடுப்பூசியால் நடுத்தர வயதினரிடையே ஏற்படும் எதிர் விளைவுகள்

இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி பெற்றவர்களில் நடுத்தர வயதினருக்கு சில எதிர்விளைவுகள் ஏற்பட்டதை அவதானித்ததாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-ஜெனெகா தடுப்பூசி இலங்கையில் கடந்த வாரம் முதல் முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் படையினருக்கு செலுத்தப்படுகிறது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், ஆலோசகர் டாக்டர் சுனில் டி அல்விஸ் கூறுகையில், நடுத்தர வயதினரிடையே பொதுவான பாதகமான எதிர்வினைகள் பதிவாகின்றன, ஆனால் அது கவலைக்குரியதாக இல்லை.

இலேசான காய்ச்சல், உடல் வலிகள் மற்றும் வாந்தியெடுத்தல் போன்றன தடுப்பூசி செலுத்தியவர்களிடமிருந்து பதிவாகின்றன.

நேற்றையதினத்துடன் நாடு முழுவதும் 95,550 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது