
கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தரை விபத்துக்குள்ளாக்கி தப்பியோடிய சாரதி கைது...!
ஹிக்கடுவை நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பியோடிய சிற்றுார்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவை காவல்துறையுடன் இணைந்து சேவை புரிந்த இவ்வுத்தியோகத்தர் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது பாதசாாிகள் கடவையைத் தாண்டி குறித்த சிற்றுார்தி செலுத்தப்பட்டுள்ளதோடு அதனை நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என காவல் துறை தொிவித்துள்ளது.
இதில் பலத்த காயங்களுக்குட்பட்ட குறித்த உத்தியோகத்தர் தற்போது கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட சாரதி பெத்தேகம - தெலிகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடையவராவார்