600 மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் 06 பேரே வருகை

600 மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் 06 பேரே வருகை

மலையகத்தில் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிககப்பட்டநிலையில் நேற்றைய தினம் 600 மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையொன்றில் 6 மாணவர்களே வருகை தந்துள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவிததுள்ளார்.

அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத சிங்கள பாடசாலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

இப்பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே வருகை நன்றாகவே வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுவதே இந்த நிலைக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது