இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வர்த்தக அமைச்சுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பேச்சு நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ மற்றும் லாப்ஸ் ஆகிய நிறுவனங்களே விலை அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை வர்த்தக அமைச்சிடம் சமர்ப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 எடைகொண்ட சிலிண்டரின் விலை 1900 ரூபா வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்சமயம் கொழும்பு உட்பட்ட இடங்களில் லிட்டோ காஸ் 1540 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் உட்பட்ட தூர இடங்களில் 1600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.