பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..!!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்த இறுதி தீர்மானம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்