
முகாமையாளருக்கு கொரோனா - இழுத்து மூடப்பட்டது அரச வங்கி
புத்தளத்தில் உள்ள அரசாங்க வங்கியொன்றில் பணியாற்றும் முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தளம் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குிறத்த முகாமையாளர் புத்தளத்தில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி முகாமையாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய வங்கியின் இரண்டு ஊழியர்களும் அவரது உறவனர்களைச் சேர்ந்த 12 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் என்.சுரேஷ், புத்தளம் நகராட்சி மன்ற ஊழியர்கள் வங்கி கிளையை முழுமையாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.