கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைக்கிறார்
சசிகலா ஐசியூ வார்டில் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதே போல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது