நாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

மலைநாட்டு மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Sudden Change In Vegetable Prices

அத்துடன், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மரக்கறிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கோவா 120 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கரட் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லீக்ஸ் ஒரு கிலோகிராம் 190 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோகிராம் 110 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.