அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம் ; போக்குவரத்து பாதிப்பு

அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம் ; போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காரணமாக, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரநாயக்க - தோதல்தோய பிரதான வீதியின் அம்பலகந்த பகுதியில், காபட் வீதி பாரியளவில் வெடித்துத் தாழிறங்கியுள்ளது.

அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம் ; போக்குவரத்து பாதிப்பு | Landslide Threat Again Aranayake Traffic Affected

கடந்த கால மண்சரிவின் போது சேதமடைந்த கால்வாய் மதகு (Culvert) முறையாகப் புனரமைக்கப்படாததால், மழைநீர் வீதியின் ஊடாகப் பாய்ந்ததே இந்தச் சேதத்திற்குப் பிரதான காரணமாகும்.

பிரதான வீதி சேதமடைந்துள்ளதாலும், மாற்று வீதியான புவக்வத்த வீதியில் மண்மேடுகள் சரிந்துள்ளதாலும் தோதல்தோய கிராமத்திற்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஏற்பட்ட 'டித்வா' புயல் மண்சரிவில் இப்பகுதியில் 13 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.