தடம் புரண்ட தொடரூந்து..!மலையகத்துக்கான தொடரூந்து சேவை பாதிப்பு

தடம் புரண்ட தொடரூந்து..!மலையகத்துக்கான தொடரூந்து சேவை பாதிப்பு

தெமோதரைக்கும் ஹாலி-எலைக்கும் இடையிலான தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து ஒன்று தடம்புரண்டுள்ளதால் மலையகத்திற்கான தொடரூந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.45 அளவில் பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடரூந்து ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மலையகத்திற்கான தொடரூந்து சேவைகள் தெமோதரை மற்றும் ஹாலி - எல ஆகிய தொடருந்து நிலையங்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில். பதுளையில் இருந்து காலை 8.30க்கு புறப்பட்ட பொடி மெனிக்கே தொடரூந்தின் சேவையும் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.