அமொிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ம் திகதி ஜோ பைடன் பதவியேற்பு!

அமொிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ம் திகதி ஜோ பைடன் பதவியேற்பு!

அமொிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் 20ம் திகதி தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ள அதேவேளையில் அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி வொஷிங்டனின் கெப்பிடல் கட்டடத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கலவர நிலைகளைத் தடுக்கும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தொிவிக்கின்றன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடுமென அமொிக்காவின் புலன் விசாரணைக் கூட்டாட்சிப் பணியகம் எச்சாிக்கை விடுத்துள்ள அதேவேளை ஆயுதம் தாங்கிய நபரொருவர் நேற்று வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.