பள்ளிகள் திறப்பு- பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

ஜன.19ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மண்டல மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் 19ந்தேதி திறக்கப்படுகிறது. 98 சதவீத மாணவர்களின்  பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. தற்போது 6,029 பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.

 


ஜன.19ல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மண்டல மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெயந்தி, லதா, நிர்மல்ராஜ், அமிர்த ஜோதி ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜன.19 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.