கொரோனா வைரஸ் பாதிப்பு : ஆசியாவில் முதலிடத்தில் இந்தியா!

கொரோனா வைரஸ் பாதிப்பு : ஆசியாவில் முதலிடத்தில் இந்தியா!

ஆசியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில்  இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதன்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஒரே நாளில் 18ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 91 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 401 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 308 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2 இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  இவர்களில் 8944 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதேவேளை தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 3509 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 70 ஆயிரத்து 977 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மட்டும் 47 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.