தினமும் இந்த வார்த்தைகளை உங்கள் மனைவியிடம் சொன்னால்...

மனைவியிடம் காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.

சில நேரங்களில் ஒரு உறவில், அதன் அடிப்படையாக உள்ள தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை நாம் மறந்து போய்விடுகிறோம். ஒரு உறவைத் தொடங்கி, ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு, நீங்கள் ரொமான்டிக்கான எல்லா பேச்சுவார்த்தைகளையும் நடத்தி முடித்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள், உங்கள் இருவருக்குமான உறவை மிகவும் சலிப்பூட்டும், தினசரி வழக்கங்களுக்குள் சுருக்கிக் கொள்வீர்கள். 

 

இவ்வாறு செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். அதனால், கூடுதலான சிக்கல்கள் ஏற்படக் கூடும். இதனால்தான் தகவல் பரிமாற்றத்திற்கு நீங்கள் கவனமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகளுக்குத் தொடக்கமாக, தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.

 

ஒரு ரொமான்டிக் உறவில் மகிழ்ச்சிக்கு மிகவும் அடிப்படையாக, அஸ்திவாரமாக இருப்பது, கவனமுடன் பேசுவதைக் கேட்பதே ஆகும். அதனால், நீங்கள் அவ்வப்போது, “நீ சொல்வதை நான் (கவனமாக) கேட்கிறேன்”என்று சொல்லுங்கள்.  வேறுவகையில் விளக்கினால், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள், ஒருவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழியாக இது இருக்கும்.

 

 

இந்த சொல், உங்களை நெருக்கமாக்குவதற்கு மிகவும் உதவக்கூடியது. உங்கள் துணைவர் உங்களுக்காக செய்யும் ஒவ்வொரு சிறிய அல்லது பெரிய செயல்களுக்கும் “நன்றி” சொல்ல மறக்காதீர்கள். உங்கள் நன்றியை வெளிப்படையாகக் கூறுவதற்கு போதுமான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நிறைவான உறவுக்கு ஒருவரையொருவர் அங்கீகரித்து பாராட்டுவது முக்கியமானது.

 

'நாம் அதை சரிசெய்து கொள்ளலாம்' இந்தச் சொற்கள், நீங்கள் ஒரு தம்பதியாக சேர்ந்து இருக்கிறீர்கள். அப்படியே தொடரப் போகிறீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டும். உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் விட்டு விலகி, தனிமையில் சிக்கலை எதிர்கொள்ள விட மாட்டீர்கள் என்று இது தெரிவிக்கிறது. உங்கள் இருவரில் ஒருவர் தவறு செய்தாலும், நீங்கள் சேர்ந்து பணியாற்றி சிக்கலைத் தீர்த்துக் கொள்வீர்கள் என்று இந்த சொற்கள் உறுதிப்படுத்தும்.

 

வருத்தம் தெரிவித்தலும் மன்னிப்புக் கோருதலும் நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறீர்கள். மேலும், பிடிவாதம் சந்தோஷத்தைத் தராது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த எளிமையான; ஆனால் சக்தி வாய்ந்த சொற்கள். இது, பல்வேறு உறவு சிக்கல்களைத் தீர்த்து வைத்திருக்கின்றன.

 

இது வெளிப்படையான ஒன்றுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு உறவின் வெளிப் படையான விஷயங்களை நாம் அடிக்கடி மறந்து போய்விடுகிறோம். முடிந்தவரை இப்படி அடிக்கடி சொல்லி வந்தால், உங்களுக்குள் மாயாஜாலம் மறையாமல் இருக்கும். உங்கள் துணைவரை பாராட்டுவது, கொஞ்சம் கிளுகிளுப்பாக பேசுவது போன்றவை எப்போதும் உற்சாகத்தை மீட்டுக் கொண்டு வரும்.