ரூபா 60000 ஆல் வந்த வினை - மூன்று பொலிஸ் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்

ரூபா 60000 ஆல் வந்த வினை - மூன்று பொலிஸ் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்

அரநாயக்க பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றில் எடுத்து செல்லப்பட்ட 80 மதுபான போத்தல்களோடு சந்தேக நபர் ஒருவரை அண்மையில் பொலிசார் கைதுசெய்தனர். எனினும் நீதிமன்றில் ஆஜர்செய்யும் போது 80 மதுபான போத்தல்களை 25 ஆக குறைத்தும் கைதுசெய்யப்பட்ட நபருக்கு மாறான இன்னொரு நபரை ஆஜர்படுத்தவும் இவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக குறித்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் 60 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளிருந்து தெரியவந்துள்ளது.

அதற்கமைய அரநாயக்க பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் இரண்டு சார்ஜன்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.