'எக்கோவ், நீங்க புலிக்குட்டியா, பூனைக்குட்டியா?' பிக்பாஸ் நடிகையிடம் செல்லமாகக் கேட்கும் ஃபேன்ஸ்
பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள புலிதோல் டிரெஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர பரிசோதனை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இன்ஸ்டாகிராம்
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிரிக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த லாக்டவுனில் சினிமா நடிகைகளின் ஒரே பொழுதுபோக்காக, இன்ஸ்டாகிராம் மாறி இருக்கிறது. அவர்கள் அதில், தங்களது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
சமையல் வீடியோ
பெரும்பாலான நடிகைகள் தினமும் ஒன்றிரண்டு புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்களது ஒர்க் அவுட் மற்றும் சமையல் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் தங்களது வீட்டுத் தோட்டத்தில் இருப்பது மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிடுகின்றனர். சிலர் தங்கள் பழைய புகைப்படங்களை பதிவிடுகின்றனர்.
ஒர்க் அவுட் புகைப்படம்
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், நடிகை சாக்ஷி அகர்வால். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இதை போல பண்ணுங்க என்று ரசிகர்களிடமும் சொல்வார்.
புலித்தோல் உடை
அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த போட்டோவில் அவர் புலித்தோல் உடை அணிந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட் போட்டுள்ளனர். ஒருவர், இந்த காஸ்ட்யூம் வேணும் எங்க கிடைக்கும்? என்று கேட்டுள்ளார். இன்னொருவர் எங்க சிறுத்தை என்று கூறியுள்ளார். ஒரு நெட்டிசன், பிளீஸ்..ஒழுங்கா டிரெஸ் போடுங்களேன்' என்று கெஞ்சி கேட்டிருக்கிறார்.
சிறுத்தை, புலி
இந்த லுக் ஒண்ணும் ஒர்த்தா இல்லை, வேற எதையாவது பண்ணுங்க? என்று ஒருவர் கடுப்பாகக் கூற, இன்னொரு ரசிகர், சிறுத்தைக்கும் புலிக்கும் என்ன வித்தியாசம்? புலி இவ்ளோ அழகா இருக்காது என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர், எக்கோவ், நீங்க புலிக்குட்டியா? பூனைக்குட்டியா? என்று கேட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.