அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்த படை தளபதிகளுக்கு அனுமதி!
லடாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்குள் துப்பாக்கிகள் அல்லது வெடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்த விதிகளில் இந்திய இராணுவம் மாற்றம் செய்துள்ளது. இதன்படி அசாதரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய ராணுவம் அதிகாரம் அளித்துள்ளது.
எல்லையில் சூழ்நிலையை சமாளிக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில் இந்த புதிய விதிமுறைகளை இராணுவம் வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.