ரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

ரெட்மி பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

ரெட்மி வாட்ச் மாடல் சதுரங்க வடிவம் கொண்ட டயல், வலது புறத்தில் பட்டன், 5 ஏடிஎம் சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், 120 வாட்ச் பேஸ்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

 

 ரெட்மி வாட்ச்

 

மேலும் 7 ஸ்போர்ட் மோட்கள், என்எப்சி வசதி, அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் இதர செயலிகளுக்கான நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி வாட்ச் மாடலில் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் வரை பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

 

சீன சந்தையில் ரெட்மி வாட்ச் மாடல் விலை RMB 269 இந்திய மதிப்பில் ரூ. 3,018 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி வாட்ச் எலிகண்ட் பிளாக், இன்க் புளூ மற்றும் ஐவரி வைட் நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் ரெட்மி வாட்ச் மற்ற சந்தைகளில் வெளியாவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.