ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
பேலியகொடை- நீர்கொழும்பு வீதி- நவலோக சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று கைதான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 50.70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு, மற்றைய நபரிடமிருந்து 5.80 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பெண் மட்டக்குளிய-சுமதித்புர பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பதோடு, ஏனைய இருவரும் கந்தான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவற்துறை ஊடகப்பிரிவு குறப்பிட்டுள்ளது.